திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜ.க விருப்பம்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜ.க விரும்புவதாக  அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

                மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் பாசிச பாஜக ஒழிக என கூறும் நிலையில், அவரது கட்சியினர் பிரியாணி கடை, அழகு நிலையம் போன்ற இடங்களில் அடாவடி செய்து வருவதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியாத தி.மு.க.வால் பா.ஜ.க.வை என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. போட்டியிட தான் விருப்புவதாக கூறிய தமிழிசை, தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல், நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்தார்.  பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருவதாகவும், ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள்யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக்கட்டும் என கூறினார். இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் எனவும்,காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு திமுக நாடகமாடி உள்ளது எனவும் தமிழிசை குற்றம் சாட்டினார்.

Related Posts