திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏகே போஸ் மரணமடைந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக தயாராகி வருகிறது. இடைத்தேர்தல் தொடர்பாக, மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்றார். இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.

Related Posts