திருப்பூா் -திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீரை திறப்பு

திருப்பூா் -திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்காக, கால்நடை பாராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தண்ணீரை திறந்து வைத்தார்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, இன்று நான்காம் மண்டல பாசனத்திற்காக  தண்ணீர்  திறந்து விடப்பட்டது. இதன்மூலம் -கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள  சுமார் 94 ஆயிரத்து 68 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடைய பொதுப்பணித்துறையினர்  கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts