திருமலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர திருக்கல்யாண உற்சவம்  கோலாகலத்துடன் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாளான நேற்று மலையப்ப சுவாமி தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக வந்து நாராயணகிரி பூங்காவை அடைந்தார். உடன் ஸ்ரீ தேவி, பூதேவி உற்சவ மூர்த்திகள் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதத்தை தெரிவித்துக்கொண்டனர்.  திருக்கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மகிழ்ச்சியால் பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

Related Posts