திருமுருகன் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி

வேலூர் சிறையிலுள்ள திருமுருகன் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

      வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்திக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டது. வேலூர் மத்திய சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட அவரை, அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, திருமுருகன் காந்தி பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டார். அங்குஅவருக்கு முழு உடற்பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Related Posts