திருமுருகன் காந்தி தனி இயக்கத்தின் தலைவர் அல்ல, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆவேசக் கனல்

திருமுருகன் காந்தி தனி இயக்கத்தின் தலைவர் அல்ல, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆவேசக் கனல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

       ஈழப் பிரச்சினை தொடர்பாக ஜநா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் தடையை மீறி நடத்தப்பட்டது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியின் நீதிமன்ற காவல்  முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமுருகன் சிறைக் காவலை நீடித்து உத்தரவிட்டார்.   முன்னதாக  திருமுருகன் காந்தியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

       ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட  தமிழர்களுக்கு சென்னை, மெரினாவில் தீபம் ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

       ஈழத் தமிழர் குறித்து பேச அதிமுக அரசுக்கு தகுதியில்லை எனவும், இலங்கையில் தீவிரவாதம் மீண்டும் தலையெடுக்காமல் இருக்க மைத்ரிபால சிரிசேனா அரசுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தபோது அதை எதிர்த்து எடப்பாடி அரசு குரல் கொடுக்காத்து ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

       திருமுருகன் காந்தி தனி இயக்கத்தின் தலைவர் அல்ல, லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆவேசக் கனல் எனவும் அவரது உடல் நலத்திற்கு கேடு ஏற்படுமானால் கொந்தளிப்பு ஏற்படும் எனவும் வைகோ எச்சரித்தார்.

Related Posts