திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் 

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையடுத்து ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு 7.05 மணி முதல் இன்று மாலை 5.35 மணி வரை கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் கூறியது.

இதையடுத்து நேற்றிரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வர்ரை வழிபட்டு வருகின்றனர்.

 

Related Posts