திருவண்ணாமலையில் மாணவர்கள் கண்களில் கறுப்புத்துணி கட்டி போராட்டம்

திருவண்ணாமலையில் அரசு கலைக்கல்லூரி முன்பாக, மாணவர்கள் கண்களில் கறுப்புத்துணி கட்டி 3 ஆம் நாளாக வகுப்புகளைக் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியல் கட்டண உயர்வு, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கக் கூடிய 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வுகளை பொதுத்தேர்வாக மாற்றுவது உள்ளிட்டவைகளை கண்டித்து இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திட்டங்களை கைவிட கோரி கண்டன முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள், இதனை அரசு கண்டு கொண்ணவில்லை என்றால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக கூறினர்.

Related Posts