திருவண்ணாமலை அருகே கர்ப்பிணி உயிரிழந்த்தற்கு தவறான சிகிச்சையே காரணம்:உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்

திருவண்ணாமலை சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு உடலில் இரத்தம் குறைவாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதயடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில்  இரத்தம் செலுத்துவதற்காக  சேர்த்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  குழந்தை அசைவில்லாத நிலையில் இருப்பதாகவும் எனவே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அறுவை சசிகிச்சையின் போது அதீத இரத்தப் போக்கு ஏற்பட்ட்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவிதாவை அவரது உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

               அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்து. இதனால் ஆத்திரமடைந்த  கவிதாவின் உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே  கவிதாவின் உயிரிழப்புக்கு காராணம் எனக்கூறி குழந்தையுடன் தனியார் மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்

               சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Posts