திருவண்ணாமலை அருகே 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் சிக்கின: தேர்தல் படையினர் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மக்களவைத்  தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியே வந்தவாசி நோக்கி சென்ற  வேனை  தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் 23 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 4 ஆயிரத்த 200 ஜெலட்டின் வெடிமருந்துக் குச்சிகள் உரிய ஆவணமின்றி கொண்டுச் செல்லப்பட்டது தெரியவந்த்து. இதனையடுத்து வாகனத்தையும், ஜெலட்டின் குச்சிகளையும் பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவற்றை கைப்பற்றிய  காவல்துறையினர் வேன் ஓட்டுனர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேனில் ஏராளமான வெடிமருந்துக் குச்சிகள் கைப்பற்றப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts