திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை

திருவள்ளூர் அருகே ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர் : மே-22

திருவள்ளூர் மாவட்டம் பத்மாவதி நகர் பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், ராமச்சந்திரனையும், அவரது மனைவியை கட்டிப்போட்டு, 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாராண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் சர்தார், ரம்ஜான் தொழுகைக்காக கோட்டை தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். தொழுகை முடிந்து வீட்டிற்கு வந்த சர்தார், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கந்தலி காவல்துறையினர், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Posts