திருவள்ளூர் அருகே கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியுள்ளது

 திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடை அடுத்த அரங்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் குமார். இவர் சங்கர், தர்மா ஆகியோருடன்  நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் பொழுது கடல் சீற்றம் காரணமாக பைபர் படகு கவிழ்ந்த்து. இதில் சங்கர், தர்மா ஆகியோர் கரை திரும்பி விட்டனர். ஆனால் குமார் மட்டும் காணாமல் போனதால் அவரது உறவினர்கள் திருப்பாலைவனம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில்  இன்று காலை லைட் ஹவுஸ் கடற்கரையில் குமாரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts