திருவள்ளூர் அருகே 80லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்

திருவள்ளூர்  மக்களவைத்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அருகே பொம்மாச்சிக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியே சென்ற  வேனை  தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் இரும்பு பெட்டியில் 80 லட்ச ரூபாய் ரொக்கம்   ஏ.டி.எம். மையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்த்து. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.  இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள்  உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லுமாறு பணத்தின் உரிமையாளரிடம் அறிவுறுத்தினர்.

Related Posts