திருவள்ளூர் வாகனச் சோதனையில் 175 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பொன்னியின் உத்தரவு படி, காவல் ஆய்வாளர் குமரன்  வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி சென்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டார். அதில் உரிய ஆவணங்களுடன் 175 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து 175 கிலோ தங்க கட்டிகள், சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து செல்லவிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த வாகனத்தை துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் பார்வதி மற்றும் வட்டாட்சியர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்தார்.

மேலும், இதுகுறித்து. வருமான வரித் துறை அதிகாரிகள் ஆவணங்களை முழுமையாக பரிசோதித்த பிறகே 57 கோடி ரூபாய் மதிப்பிலான 175 கிலோ தங்கத்தை அந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts