திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2-ஆவது நாளாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மற்றும் தொல்லியல் துறையினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள சிறிய கோவில்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 359 சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளின் தொன்மை குறித்தும், உண்மைத் தன்மை குறித்தும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரும், தொல்லியல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று தொடங்கிய ஆய்வு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராமன், தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையிலும் 70 பேர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.சிலைகளின் எடை, உலோக விகிதம் குறித்து எந்திரங்கள் மூலம் இந்தக் குழு ஆய்வு செய்கிறது. சிலைகளின் பழைய புகைப்படங்களுடன், சிலைகள் ஒத்துப் போகிறதா என்பது குறித்து சோதிக்கப்படுகிறது. நேற்று மட்டும் இங்கு 87 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இன்று நாகை மாவட்டம் பொரவாச்சேரி கோவில்களைச் சேர்ந்த சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன

Related Posts