திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஆழித்தேரோட்ட விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் தியாகராஜர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

இதில், லடசக்கணக்கான பக்தர்கள், தியாகேசா என்ற கோஷத்துடனும், பக்தி பரவசத்துடனும், தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

Related Posts