திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல்

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

           மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிகிறது. இதனால் இந்த 3 மாநிலங்களிலும்  தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, தனது ஆட்சியை கடந்த வாரம் கலைத்தது.

           இதனால் தெலுங்கானா மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

           தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. நவம்பர் மாதம் தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts