திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே கூறினார்: டிடிவி தினகரன் பாய்ச்சல்

 

 

திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என சசிகலாவே தன்னிடம் கூறியதாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், மே-01 

திருப்பூரில் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாமிநாதன் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், திவாகரன் அம்மா அணி என திடீரென தனிக்கட்சி தொடங்கியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல்தான் காரணம் என குற்றம்சாட்டினார். திவாகரன் கூறுவதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Related Posts