தி.மு.க உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் மு.இராமநாதனின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு:  வைகோ 

கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , திமுக செயல் திட்ட உறுப்பினருமான மு.இராமநாதன் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார் அவருக்கு வயது 87. இந்நிலையில்ல் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று காலை மு.இராமநாதனின் இல்லத்திற்குச் சென்று  அவரது திருவுருவச் படத்திற்கு மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.இராமநாதனின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு எனவும் இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மிசா காலம் வரை கருணாநிதியின் உத்திரவினை ஏற்று அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டவர் என புகழாரம் சூட்டினார். . சட்டமேலவை  சட்டமன்றம்மற்றும் , நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார் எனவும், தி.மு.க வின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஓருவர் எனவும் அவர் தெரிவித்தார். திருமண நிகழ்ச்சி, மாநாடு, கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம் என அனைத்திலும் திராவிட இயக்க கருத்துகளை பரப்பியவர் எனவும், இடைவிடாமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேசும் ஆற்றல் உடையவர் எனவும் அவர் தெரிவித்தார். மு.ராமநாதனின்மறைவு  ஒட்டு மொத்த மக்களுக்கும் , தி.மு.கவிற்கும் ஏற்பட்ட பேரிழப்பு எனவும்,அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் வைகோ தெரிவித்தார்..

Related Posts