தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி இன்று உரை

 

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.

கடந்த மார்ச் 13ஆம் தேதி நாகர்கோவிலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். பெங்களூரில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் இன்று  நண்பகல் கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதனையடுத்து,  இன்று மதியம்  சேலத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இதனைத்தொடர்ந்து, மாலை 3 மணியளவில் தேனியிலும், மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றத்திலும் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்த பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts