தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் அண்ணா அறிவாலய வளாகத்தில் ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. வருகிற 16-ந்தேதி நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். ஆந்திர முதல்அமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர்கள் என்பதால் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனைடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.   அப்போது  கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு நேரில் அழைப்பு விடுக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ள  எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும்  ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Related Posts