தி.மு.க.பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

திருப்பூரில் தி.மு.க.பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் காவிலிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த  பாலமுருகன், கடந்த 4 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி  பாலமுருகன் அலுவலகத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் விக்னேஸ்வரன், முத்துக்குமார், உதயா, நந்தா, ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த அரிவாள், கத்தி, சுத்தியல் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பாலமுருகனிடம் வட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால், கொலை செய்ததாகவும் விசாரணையில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

Related Posts