தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைகாக கோ – ஆப்டெக்ஸ் நிறுவனம்

தூத்துக்குடியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, போட்டிகள், கருத்தரங்குகள், மற்றும் ஆலோசனை கூட்டங்கள்  நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கோ – ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை  ஆட்சியர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார்.

Related Posts