தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி வருகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை வாசிகள், சொந்த  ஊருக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு  முடிந்துவிட்டது. தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு உடனே முடிந்து விடும் என்பதால் பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை,  நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில்  ஆயிரத்து 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சொகுசு மற்றும் குளிர்சாதன சிறப்பு பேருந்துகளில் தினமும் 1  லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 25-ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்கியது. www.tnstc.in, www.redbus.in, www.paytm.com ஆகிய இணைய தளங்கள் வழியாக பொதுமக்கள் டிக்கெட்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts