தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி திருநாளை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மொத்தம் 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படடுள்ளது.

                நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதமும், மின்சார வாரியம், போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியம் பணியாளர்களுக்கு மொத்தம் 20 சதவீதமும் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரையிலும்,  பிற கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தகுதியுடைய பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரையிலும் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, போனஸ் பெற தகுதியுடைய நிரந்தர தொழிலாளர்கள், குறைந்த பட்சமாக 8 ஆயிரத்து 400 ரூபாயும், அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாயும் பெறுவார்கள் என்றும் மொத்ததத்தில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும் என்றும்  என அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts