தீரன் சின்னமலையின் 263வது பிறந்தநாள் விழா: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

 

 

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை, ஏப்ரல்-17 

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263வது பிறந்த நாள் விழா, இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச்சிலைக்கு,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   முன்னதாக, தீரன் சின்னமலையின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தும்,  அவரது உருவப்படத்துக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Related Posts