தீர்ப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய தேவையான உதவிகளை அரசு செய்யும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் விரைவில் தமிழில்வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தீர்ப்புகளை தமிழில் வெளியிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சி.வி. சண்முகம் கூறினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் ஆக்கப்பூர்வமானது என்று அவர் தெரிவித்தார். அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை என்று அவர் கூறினார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடிச் சென்று, தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறினால்தான் இங்கு முதலீடு வாய்ப்பு உருவாகும் எனவும் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Related Posts