தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார்:மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத் மற்றும் மகபூபாபாத் மாவட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அரசில் மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.  பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவளிக்கும்படி மக்களிடம் அவர் கேட்டு கொண்டார்.

தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

Related Posts