துணை சபாநாயகர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் : புதுச்சேரி சபாநாயகர்

துணை சபாநாயகர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படும் என புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து  அறிவித்துள்ளார்..

சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் சபாநாயகர் பதவியை அவர் ராஜினாசெய்தார். இதையடுத்தி,  துணைசபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து கடந்த 3 ம் தேதி போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து காலியாக உள்ள துணை சபாநாயகர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இப்பதவிக்கு போட்டியிட ஏதுவாக, சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் ராஜினமா செய்து அதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமியிடம்  வழங்கினார். இப்பதவிக்கு எதிரணியில் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் துணை சபாநாயகராக பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Related Posts