துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-29

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட அழிவுக்கு தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

Related Posts