துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அனைத்து காவலர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-23

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி போராட்டத்தின்போது, பொதுமக்களை காவல்துறையினர் கொலை செய்தமைக்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அனைத்து காவலர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Posts