துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட 1,112 பேரை கைது செய்ய உத்தரவு

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ஆயிரத்து 112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார். அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மதகுரு பெதுல்லா குலென் தான்,ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை காவல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய ஆயிரத்து 112பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Posts