துருக்கியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் வெற்றி

துருக்கியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளார்.

துருக்கி : ஜூன்-25

துருக்கி நாடாளுமன்றத்திற்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், குடியரசு மக்கள் கட்சியின் முஹர்ரம் இன்ஸ் என்பவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் துருக்கி மக்கள் இரண்டு வாக்குகளை பதிவு செய்தனர். முதல் ஓட்டு அதிபரை தேர்ந்தெடுப்பதற்கும், மற்றொன்று நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காகவும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தற்போதைய அதிபர் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் எர்டோகனின் வெற்றியை ஏற்கப் போவதில்லை என முஹர்ரம் தெரிவித்துள்ளார்.

Related Posts