துரோணச்சாரியா விருதுக்கு ராகுல்டிராவிட் பெயரை பரிந்துரைக்கவில்லை

மத்திய அரசின் துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை பரிந்துரைத்து உள்ளதாக வெளியானதை தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

டெல்லி : மே-02

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். அவரது பயிற்சியின் கீழ், 19 வயதுக்குட்பட்டோருக்கான 2017-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. இதையடுத்து ராகுல் டிராவிட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி, துரோணச்சாரியா விருதுக்கு ராகுல் டிராவிட் பெயரை கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது என்பதில் உண்மையில்லை என்றார்.

Related Posts