தூத்துக்குடியில் அனைத்து சிறு குறு குளங்கள் தூர்வாரப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவுப்பு

தூத்துக்குடியில் உள்ள அனைத்து சிறு குறு குளங்கள் தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படஉள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து 50 கன அடி தண்ணீர் கூடுதலாக கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் அதன் பின்னர் மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது  என மாவட்ட ஆட்சியர் சந்திப் ந்ந்தூரி தெரிவித்தார்.

Related Posts