தூத்துக்குடியில் காவல்துறையினர் திட்டமிட்டே 13 பேரை சுட்டுக் கொன்றனர்

தூத்துக்குடியில் காவல்துறையினர் திட்டமிட்டே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி : மே-25

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில், நவீன துப்பாக்கியை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காவலர் சீருடை அணியாமல் கூலிப்படை போல் காவல்துறை செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய வைகோ, மக்கள் ஒன்று திரண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts