தூத்துக்குடியில் சமூக விரோதிகள் யார் என ரஜினி அடையாளம் காட்ட வேண்டும்

தூத்துக்குடியில் சமூக விரோதிகள் யார் என நடிகர் ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி : மே-31

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, நடிகர் ரஜினியின் குரல் பாஜக அல்லது அதிமுகவினுடையதா? என்பது சந்தேகமாக உள்ளது என்று கூறினார். சமூக விரோதிகள் தெரியும் என்று கூறிய ரஜினி, நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதி, போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது நடிகர் ரஜினிக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

Related Posts