தூத்துக்குடியில் சொத்துத்தகராறில் தம்பியை துப்பாக்கியில் சுட்டுக்கொன்றவர் உட்பட 8 பேர் கைது 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட  தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராகவும்,  விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருப்பவர் பில்லா ஜெகன். லாரி தொழில் செய்துவரும் இவரிடம், அவரது தம்பி சிம்சன் சொத்தில் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், பில்லா ஜெகன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சிம்சனை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சிம்சனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தலைமறைவான பில்லா ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேரை  திருவனந்தபுரம் அருகே காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts