தூத்துக்குடியில்  தகவலின் அடிப்படையிலேயே கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை : சத்யபிரதா சாகு 

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே திமுக வேட்பாளர்  கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகவும், சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் கூறினார். ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார் வருமான வரித்துறையின் அறிக்கையின்படி பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் விளக்கமளித்தார். மேலும் தான் வாங்கிய பொருளுக்காகத்தான் முதல்வர் பழனிசாமி பணம் கொடுத்துள்ளார் என்றும், முதல்வர் பணம் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோவை எடிட் செய்து வெளியானதாகவும் அவர் கூறினார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நேற்று முன்தினம் வரை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறினார். தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை .138 கோடியே 57 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், , காவல்துறையினர் அளிக்கும் பரிந்துரைப்படி தேவைப்படும் இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், , மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருவோருக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். , மதுரையில் இரவு 8 மணிக்குள் டோக்கன் தரப்பட்டு எவ்வளவு நேரமானாலும் வாக்குப்பதிவு நடைபெறும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார். வெப்காஸ்டிங் உள்ளிட்ட 4 வெவ்வேறு வழிமுறைகள் மூலமாக, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்றும், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும் என்றும். வாக்குப்பதிவின் போது தகவல் சேகரிக்க 3 ஆயிரத்து,400 பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

Related Posts