தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர்

 

 

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Related Posts