தூத்துக்குடியில்  பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும்

தூத்துக்குடியில்  பனிமய மாதா ஆலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என ஆலய பங்கு தந்தை குமார்ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 437ம் ஆண்டு பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆலய பங்கு தந்தை குமார்ராஜா, பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார். மேலும்  இது பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Posts