தூத்துக்குடியில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை ஆதரித்து, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணிக் கட்சிகள் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக தூத்துக்குடி மதுரை புறவழிச்சாலையில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Related Posts