தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் வினியோகம் துண்டிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் வினியோகம் இன்று காலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி : மே-24

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2-வது யூனிட் விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. மேலும், 4 மாத காலத்திற்குள் விரிவாக்கம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு  நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவையடுத்து  இன்று அதிகாலை 5 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆலையின் கழிவுகள் உப்பாற்றில் கலக்காமல் இருக்க அரண் அமைக்கும்படி, மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டளையை நிறைவேற்ற தவறிவிட்டது. இதனைத்தொடர்ந்து, ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கான உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts