தூத்துக்குடியில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை,கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது: சந்திப் நந்தூரி

தூத்துக்குடியில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி முத்துநகர் கடற்கரையில் பட்டம் விடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக்க் கூறினார். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மாவட்ட்த்தில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Posts