தூத்துக்குடியில் 403 ஊராட்சிகளிலும் நாளை 500 மரக்கன்றுகள் நடப்படும் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளிலும் நாளை 500 மரக்கன்றுகள் நடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

73 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தேச தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால்நேரு, வ.உ.சிதம்பரனார், பாரதியார்,காமராஜர் போன்றவர்களின் சுதந்திரத்தில் ஆற்றிய பங்கு பற்றி விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் அந்தந்த தலைவர்களின் முகமூடிகளை அணிந்தவாறு தனியார் பள்ளி மாணவர்களின்விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை   மாவட்ட  ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,.சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுமார்இரண்டு லட்சம் மரங்கள் நடப்பட உள்ளது என்று கூறினார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500 குளங்கள் தூர் வரப்பட உள்ளதாகவும்,  குளங்களை தூர் வாருவதற்க்காகவும்,  நீர்நிலைகளை பாதுகாப்பதற்காகவும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தும் வகையில்  கிராமசபைகூட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts