தூத்துக்குடி: எட்டயபுரத்தில் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 100 பவுன் நகைகள் கொள்ளை

 

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு 100 பவன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்,  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அடுத் எட்டயபுரம் பெரியகிணற்று தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்ராஜா. இவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறம் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரது கடையின் பின் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை  இவரது கடைக்கு பின்புறம் உள்ள விடுதி அறை வழியாக நுழைந்த கொள்ளையர்கள், அங்குள்ள சுவரை ஓட்டை போட்டு, நகைக்கடைக்குள் சென்றுள்ளனர். கடையில் நகைகள் இருந்த இரும்பு பெட்டியை வெல்டிங் மூலமாக உடைத்து,  அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ மதிப்பிலான வெள்ளி பொருள்களை அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். சுவரை ஓட்டை போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எட்டயபுரம் காவல்துறையினர், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Posts