தூத்துக்குடி சிறுவன் கடத்தல் வழக்கு : 6 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் மகன் விஷால் கடந்த 2011 ஆண்டு கடத்தப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தென்பாகம் போலிசார் ராஜ்குமாரின் கார் ஓட்டுநரான கேவிகே நகரைச் சேர்ந்த பாலகருப்பசாமி, மாரியப்பன், மகேஷ், லட்சுமிகாந்தன், ஜெகநாதன், முருகேசன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறுவனை மீட்டனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Posts