தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின்  வாரிசுகளுக்கு முதல்வர் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின்  வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்த 10 பேரின் வாரிசுதாரர்களுக்கும், பலத்த காயமடைந்த 5 பேருக்கும், மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும் என மொத்தம் 19 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன. இந்த பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கி ஆறுதல் கூறினார்.

Related Posts