தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை : மே-23

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அனுமதி கொடுத்தது என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தான் உண்ணாவிரதம் இருந்ததாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட படுகொலை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரின்ஸ், ராஜேஷ்குமார், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Posts