தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 428 அப்பாவிகள் மீது வழக்கு : தமிழக அரசுக்கு அறிக்கை

எந்தவித ஆதராமுமின்றி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் நிகழ்வில் 428 அப்பாவிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக ஒரு நபர் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  மக்கள் போராட்டம் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி தீவிரமான நிலையில், போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரிக்க  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், இடைக்கால அறிக்கை ஒன்றை விரைவில் தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறது. 428 பேர் மீது பதியப்பட்ட 244 வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களுக்கு உடனே தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.  போலீசாரால் பாதிப்புள்ளானவர்களுக்கு தலா 1புள்ளி 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஆறரை கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து முழுமையாக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில்  பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்களின் நிலை மிக மோசமாக இருப்பதை உணர்ந்தது இடைக்கால பரிந்துரைகளை ஆணையம் முன்வைக்க இருக்கிறது.

Related Posts